புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு விவசாயி கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வலியுறுத்தியும் காரைக்கால் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் புதுச்சேரி அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுங்காடு விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் நெடுங்காடு பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் காரணமாக கும்பகோணம் – காரைக்கால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போலீசார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா பேச்சுவார்த்தை செய்து தங்களது கோரிக்கைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இந்த நிலையில் காரைக்கால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.













; ?>)
; ?>)
; ?>)