• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தாணு மாலைய சுவாமி கோயில் பெரிய ஆஞ்சநேயர்சிலைக்கு பல்வேறு அபிசேகம்..,

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று அனைத்து கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

இன்று அதிகாலையில் இருந்து 18 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன, பின்னர் பால். தயிர், நெய், இளநீர்,மஞ்சள், திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், பழவகைகள், மலர்கள் உட்பட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன.

பக்தர்கள் அனைவருக்கும் ‘லட்டு’. பிரசாதம் வழங்கப்பட்டது.

கோவிலின் சுற்றுபிரகாரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான லட்டுகள்
பரவிகிடந்தது.

லட்டு குவியலை கோவில் தரிசனத்திற்கு வந்த வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றார்கள்.