• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வி.ஏ.ஓ., அலுவலகம் மேற்கூரை பெயர்ந்து விழுந்து காயம்..,

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகாகவுக்குட்பட்ட நெய்வாசல் தென்பாதி கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம், கடந்த 2001ம் ஆண்டு கட்டப்பட்டது. இக்கட்டடம் பழுதடைந்த நிலையில், கட்டடத்தை புதுப்பிக்க கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், தலையமங்கலம் வி.ஏ.ஓ., நடராஜன்,36, பொறுப்பில் இருந்துள்ளார். மேலும், நெய்வாசல் கிராமத்தை பொன்னுசாமி மகன் பாலசுந்தரம் ,73, முருகையன் மகன் பாண்டியன்,55, ஆகிய இருவரும் சிட்டா அடங்கல் வாங்குவதற்காக வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்தனர்.

அப்போது, வி.ஏ.ஓ., அலுவலகத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது. இதில், பாலசுந்தரத்திற்கு, தலையிலும், பாண்டியனுக்கும் தோள்பட்டையிலும், வி.ஏ.ஓ., நடராஜனுக்கு கையிலும் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக கிராமமக்கள் 108 ஆம்புலென்ஸ்க்கு போன் செய்தனர்.

இதற்கிடையில் தகவலறிந்த ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ், நெய்வாசலுக்கு சென்றார். ஆம்புலென்ஸ் வர தாமதமானதால், தாசில்தார் யுவராஜ் தலையில் காயம் ஏற்பட்ட பாலசுந்தரம் மற்றும் பாண்டியனை மீட்டு, தனது வாகனத்தில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, பாலசுந்தரத்திற்கு தலையில் மூன்று தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன் தோள்பட்டடையில் காயம் ஏற்பட்ட பாண்டியன், கையில் லோசன காயத்துடன் தப்பிய வி.ஏ.ஓ., நடராஜன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.