திண்டுக்கல் அருகில் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் அய்யம்பாளையத்தை சேர்ந்த இளையராஜா என்பவரின் கன்னிவாடி அருகே உள்ள 6.1/2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக வந்திருந்தார். அவரிடம் ஆத்தூர் தாலுகா மணலூர் கிராம நிர்வாக அலுவலர் முருகன் என்பவர் ஆத்தூர் தாலுகா அலுவலகம் வளாகத்தில் உள்ள VAO அலுவலகத்தில் வைத்து ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றார்.

திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, ரூபா கீதாராணி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








