• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

20 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்த “வாங்கண்ணா வணக்கங்கண்ணா ” திரைப்பட குழு..!

Byஜெ.துரை

Nov 8, 2023

ராக்&ரோல் ப்ரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் சார்பில் யாஷ்மின் பேகம் மற்றும் மணிமேகலை லட்சுமணன் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’.

இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் கதையில் உருவாகியுள்ளது.

முழுக்க, முழுக்க காமெடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஓரு எம்.எல்.ஏ.வுக்கும், யூ டியூபருக்கும் இடையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டு எம்.எல்.ஏ.வின் கோபத்துக்கு ஆளாகிறார் யூ டியூபர்.

இந்தப் பிரச்சனையில் இருந்து 24 மணி நேரத்திற்குள் அந்த யூ டியூபர் தப்பினாரா. இல்லையா. இது தான் படத்தின் கதை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படமானது 20 நாட்களுக்குள் மொத்தப் படத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ளது. படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

சுந்தர் மஹா ஸ்ரீ ஹீரோவாக நடிக்கிறார். சந்தியா ராமசுப்பிரமணியன் ,அபினய ஸ்ரீ இருவரும் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் வில்லியாக நதியா வெங்கட் மற்றும் பிரபு , சன்னி பாபு ஹீரோ நண்பர்களாக நடிக்க உள்ளனர்.