ஜி.எஸ்.டி 2.0 அமலுக்கு வந்துள்ள நிலையில், கோவையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய பா.ஜ.க தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் கடைகளுக்கு சென்று கலந்துரையாடினார்.

ஜி.எஸ்.டி வரி குறைப்பு அமலுக்கு வந்த நிலையில் உணவு பொருட்கள், வாகனம், எலக்ட்ரானிக்ஸ் உட்பட பல்வேறு பொருட்களின் விலை குறைந்தது. இந்நிலையில் ஜி.எஸ்.டி 2.0 ஏற்படுத்திய தாக்கம் குறித்து அறிந்து கொள்ள கோவையில் உள்ள டீக்கடை, உணவு பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு பா.ஜ.க தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் நேரில் சென்று கலந்துரையாடினார்.
விலை குறைந்ததால், வாடிக்கையாளர்களும் திருப்தி அடைந்ததாகவும், புதிய விலையில் விற்பனை செய்வதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.