• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பா.ஜ.,வின் உண்மை கண்டறியும் குழுவில் புதிதாக இணையும் வானதி, குஷ்பு

மேற்குவங்கத்தில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், உண்மை கண்டறியும் 5 பேர் குழுவை பா.ஜ., அமைத்துள்ளது.

அக்குழுவில் தமிழகத்தை சேர்ந்த குஷ்பு, பா.ஜ., எம்எல்ஏ வானதி சீனிவாசன் இடம்பெற்றுள்ளனர்.மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்காலி பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளிச் சிறுமி ஏப்ரல் 4ம் தேதி இரவு திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் மகன் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொள்ள சென்றவர், மறுநாள் அதிகாலையே வீடு திரும்பியுள்ளார். ஆனால், உடல்நலம் குன்றிய நிலையில் வீடு திரும்பிய அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதேநாளில் அவரின் உடல் தகனமும் செய்யப்பட்டது. மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சிறுமியின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்படி, பஞ்சாயத்துஅதேநேரத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என அம்மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது குறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘என்ன நடந்தது என்று போலீஸ்க்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தான் சிறுமி இறந்தார் என ஊடகங்கள் தொடர்ந்து சொல்கின்றன. சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டாரா அல்லது கர்ப்பமாக இருந்தாரா, அல்லது அது ஒரு காதல் விவகாரமா என்பதை ஊடகங்கள் விசாரித்ததா.. நான் இதை ஒரு காதல் விவகாரம் என்று கேள்விப்பட்டேன்’ என்றார்.முதல்வரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. மம்தாவின் கருத்துக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ., சார்பில் உண்மை கண்டறியும் குழுவை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அமைத்துள்ளார். 5 பேர் கொண்ட அக்குழுவில், தேசிய துணை தலைவர் ரேக்கா வர்மா, உ.பி., அமைச்சர் பேபி ராணி மவுரியா, தமிழக எம்எல்ஏ., வானதி சீனிவாசன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக குஷ்பு, மேற்குவங்க எம்எல்ஏ ஸ்ரீரூபா மித்ரா சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றனர்.