• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருச்செங்கோட்டில் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டம்

ByNamakkal Anjaneyar

May 30, 2024

திருச்செங்கோட்டில் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டம் 47வது முறையாக அரங்கேற்றம் 256 இளைஞர்கள் மற்றும் சிறுமிகள், பெண்கள் கலந்து கொண்டு வள்ளி கும்மி ஒயிலாட்டம் ஆடினார்கள்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேலூர் ரோடு விவேகானந்தா மைதானத்தில் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மி ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா நடைபெற்றது. வள்ளி கும்மி ஒயிலாட்ட ஆசிரியர் கனகராஜ் தலைமை வகித்தார். தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 256 சிறுவர் சிறுமிகள் பெண்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்ட வள்ளி கும்மி ஒயிலாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு பாடல்களுக்கு இசைக்கு ஏற்ப நடனமாடினார்கள் பாரம்பரியமான கொங்கு நாட்டின் கலையான அழிவின் விளிம்பில் இருந்த வள்ளி கும்மியாட்டத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலம் பல்வேறு ஊர்களில் இது போன்ற அரங்கேற்ற நிகழ்ச்சிகள் நடந்துள்ளது இது தங்கள் குழுவின் 47வது நிகழ்ச்சி என்றும் 6000க்கும் மேற்பட்டவர்கள் தற்போது இந்த ஆட்டத்தில் முழு பயிற்சி பெற்றுள்ளனர். காலத்தால் அழிக்க முடியாத கலையாக இதனை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.