• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

கபடி வீராங்கனைக்கு வை.தினகரன் பாராட்டுடன் அரசுக்கு கோரிக்கை..,

பஹ்ரைனில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதில் குறிப்பாக, தமிழகத்திலிருந்து சென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்த, ‘கண்ணகி நகரைச் சேர்ந்த’ வீர மகள் கார்த்திகாவிற்கு தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றது.*

சென்னையில் பல்வேறு இடங்களில் வசித்துக் கொண்டிருந்த பூர்வக்குடி மக்களை எல்லாம் அப்புறப்படுத்தி அவர்களை குடியேற்றுவதற்காகாக 2000 ஆம் ஆண்டு “”கண்ணகி நகர்” உருவாக்கப்பட்டது..*
ஏறத்தாழ 20000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.* இவர்களில் பெரும்பாலானோர் தூய்மை பணியாளர்கள், தினக்கூலிகள், இவர்களாலே சென்னை இயங்குகின்றது. ஆனால் இந்த பகுதிக்கு சுத்தமான குடிநீர்,சுகாதாரம் என எந்த அடிப்படை வசதியும் சரியாக கிடைக்காது…*

சென்னையில எந்த ஏரியானு கேட்டால் கண்ணகி நகர் என தாங்கள் வசிக்கும் ஏரியா பெயரை கூட சிலர் சொல்ல மாட்டார்கள், எங்கே சொன்னால் நம்மை வேறு விதமாக பார்ப்பார்களே,பழக மாட்டார்களே என்ற எண்ணத்தில் மறைப்பார்கள்… உழைக்கும் மக்களான கண்ணகி நகர் மக்களை தீண்டத்தகாதவர்களாகவும், குற்றச்செயல் புரிபவர்களாகவும் பார்த்து தான் மக்களும்,அதிகார வர்க்கமும் இன்று வரை புறக்கணித்து கொண்டிருக்கின்றது.*

கண்ணகி நகர் என்றாலே ஒருவித ஒவ்வாமையுடன் பார்க்கும் சிங்காரச் சென்னையில், இன்றைக்கு ‘கண்ணகி நகர்’ என்கிற பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை எனும் அளவிற்கு இந்த வெற்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தகுதிக்கும் திறமைக்கும் எந்த வரையறையோ படிநிலையோ இல்லை என்பதையும் கார்த்திகா மெய்ப்பித்துள்ளார்.

நீங்கள் எல்லாம் நினைப்பது போல மோசமான ஊர் கிடையாது, கண்ணகி நகருக்கு என்று வேறொரு பக்கம் இருக்கின்றது. கண்ணகி நகர் என்ற அடையாளத்தோடே நாங்கள் அதை இந்த உலகிற்கு காட்டுவோம் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே “”UNIVERSAL KANNAGI NAGAR WOMEN’S KABADDI CLUB “”. பெண்கள் கபடி அணியை உருவாக்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று அதிலும் கண்ணகி நகர் மாதிரி பகுதி என்றால் . அங்கே பெரும்பாலும் அப்பா அம்மா இருவரும் தினக்கூலிகள் இந்த நிலையில் பிள்ளைகளை விளையாட விடுவது,பள்ளியில் பெண்கள் அணிக்கு அனுமதி வாங்குவது,விளையாட மைதானம் என்று ஆயிரம் சிரமங்கள்.
கண்ணகி நகரிலேயே அதிநவீன கட்டமைப்பு வசதி கொண்ட, சிறந்த கபடி மைதானத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கபடி வீரர், வீராங்கனைகளின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும்”

பொதுவாக, இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழக அரசுப் பரிசுப் பொருட்களையும் அரசுப் பணியையும் வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பஹ்ரைனில் வெற்றி பெற்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற ஹரியானவைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு தலா 3 கோடி ரூபாய் வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. முன்னதாக, சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த தமிழக அரசு, கபடி போட்டியில் இந்தியாவின் வெற்றிக்காக அயராது உழைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கும் ஏனைய தமிழக வீராங்கனைகளுக்கும் அரசுப் பணியோடு கூடிய பரிசுத்தொகையை வழங்க முன்வர வேண்டும்.*

சமூகநீதி பேசும் தமிழக அரசு அரசு ஊக்கத்தொகையை சாதி ரீதியாக கட்டமைக்காமல் சமூக நீதியோடு கண்ணகி நகர் கார்த்திகாவிற்கும் 3 கோடி ரூபாய் அரசு ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.*

எல்லா தடைக் கற்களையும் உடைத்தெறிந்து கபடி உலகில் வெற்றி கொடி நாட்டிக் கொண்டிருக்கும் 17 வயதே நிரம்பிய தங்க மகள் கண்ணகி நகர் கார்த்திகா விரைவில் இந்திய சீனியர் அணியில் இடம் பிடிக்கவும் DYAN CHAND,ARJUNA AWARD,DHRONACHARYA AWARD போன்ற விருதுகளை பெறவும் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் “