• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வ.உ.சி. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் இடமாற்றம்…

BySeenu

Nov 3, 2023

மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவையில் செயல்பட்டு வரும் வஉசி உயிரியல் பூங்காவில் போதிய இடவசதி இல்லாததால், பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது. இதனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உயிரியல் பூங்கா செயல்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இங்குள்ள விலங்குகள் பறவைகள் ஆகியவை இடம் மாற்றம் செய்யப்பட்டன. இங்குள்ள விலங்குகள் பறவைகள் அனைத்தும் வண்டலூர் பூங்கா, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், வேலூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றன. இதற்காக இன்று கோவை வந்த உயிரியல் பூங்கா ஆணைய நிர்வாகிகள் இங்குள்ள விலங்குகளை கணக்கிட்டு ஆய்வு செய்து அவற்றை இடமாற்றம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

இன்றைய தினம் பாம்புகள் முதலைகள், குரங்குகள், ரோஸ் பெலிகன் பறவைகள் உள்ளிட்டவை இடமாற்றம் செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து இங்குள்ள அனைத்து விலங்குகளும் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

இது குறித்துப் பேசிய வ.உ.சி உயிரியல் பூங்கா டைரக்டர் சரவணன், மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் 2022ஆம் ஆண்டு போது இட வசதி இல்லாததால் இதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டதாகவும் இதனால் இங்குள்ள விலங்குகளை எல்லாம் வண்டலூர், சத்தியமங்கலம், வேலூருக்கு இடமாற்றுவதாக தெரிவித்தார். இன்று பாம்புகள், குரங்குகள், முதலைகள், ரோஸ் பெலிக்கன் ஆகியவற்றையெல்லாம் எடுத்து செல்வதாக தெரிவித்தார்.