அரசின் பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தை கட்சி மாநகர செயலாளர் அல்காலித் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பேக்கரி உரிய உரிமம் பெறாத நிலையில் நடவடிக்கை எடுத்த பெண் அதிகாரியை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின். நாகர்கோவில் மாநகர செயலாளர் அல்காலித் மற்றும் மணவை கண்ணன் மீது அரசு அதிகாரி பார்வதி, வடசேரி காவல்துறையிடம் கொடுத்த புகாரின்
அடிப்படையில். பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் அதிகாரியை மிரட்டிய சம்பவம் குறித்து சமூக ஆர்வலரும், பச்சை தமிழர் இயக்கம் தலைவர் சு.ப. உதயகுமாரன் கண்டனம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டையும், நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
திருமாவளவனின் காதில் எட்டியதின் அடிப்படையில் ,அவரது கட்சியை சேர்ந்த
அல்காலித் மீது நடவடிக்கை என்ற செய்தியே பொதுவெளியின் எதிர் பார்ப்பாக இருக்கிறது.













; ?>)
; ?>)
; ?>)