• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அமெரிக்க துணை அதிபர் தீபாவளி வாழ்த்து..!

Byவிஷா

Nov 10, 2023

அமெரிக்க துணை அதிபர் ஹமலாஹாரீஸ் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில் 300-க்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து விருந்தினர்கள் மத்தியில் உரையாற்றிய கமலா ஹாரிஸ்,
“இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெறும் சூழலில், உலகம் எதிர்கொண்டிருக்கும் இருண்ட மற்றும் கடினமான நிலைக்கு ஒளி ஏற்படுத்தும் வகையில் தீபங்களின் பண்டிகையான தீபாவளியைக் கொண்டாடுவது முக்கியம். 
இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதற்காக, இந்த தீபாவளி அமையட்டும். பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும். அதே நேரம், இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கும்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.