மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு மகளிர் சட்ட உதவி மன்றம் சார்பில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், பள்ளிகளில் மனநல ஆலோசனை மையங்கள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மதுரையில் தமிழ்நாடு மகளிர் சட்ட உதவி மன்றம் சார்பில் கல்வி நிறுவனங்களில் அதிகரிக்கும் இயற்கைக்கு மாறான மரணங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத்தலைவர் தொடங்கிவைத்து பேசினார். நிகழ்ச்சியில் பாலபாரதி, மல்லிகா, மத்திய குழு உறுப்பினர்கள் பொன்னுத்தாய், சசிகலா பங்கேற்றனர். நடைபெற்ற இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் மாணவர்களின் மனநிலை பாதிப்பதை தடுக்க அவர்களுக்கு பள்ளிகளில் ஆலோசனை மையங்கள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பள்ளிகளில் மனநல ஆலோசனை மையங்கள் அமைக்க வலியுறுத்தல்..!





