• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உ.பி: சமையலறையில் கேஸ் லைன்
வெடித்து விபத்து-: 10 பேர் படுகாயம்

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. எம்போரியோ கிராண்ட் ஹோட்டலின் சமையலறையில் உள்ள கேஸ் லைனில் கசிவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சமையலறையில் படுகாயங்களுடன் சிக்கி இருந்த ஊழியர்களை மீட்டனர். இதுகுறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (ஏடிசிபி), ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா, நேற்று மாலை ஹோட்டலின் சமையலறை எரிவாயு லைனில் கசிவு ஏற்பட்டது. அதன் பிறகு போலீஸ் குழு, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். சம்பவத்தின் போது, சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக லோக் பந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றார்.