விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறைந்த முன்னாள் முதன்மைச் செயலாளர் உஞ்சைஅரசன் 2ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திருவோணம் அருகே உள்ள காட்டாத்தி உஞ்சிய விடுதி கிராமத்தில் கலந்து கொண்டு உஞ்சைஅரசன் நினைவிடத்தில் மலர்தூவி, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தொல். திருமாவளவன் பேசுவையில் பேசுகையில் தமிழகத்தில் அடுத்த முதல்வர் நான் தான் என்று பல பேர் போட்டி போடுகிறார்.

அந்த இடத்திலும் நாம் இல்லை ஆனாலும் நம்மை ஏன் அவர்கள் விமர்சிக்கிறார்கள் என்றால் நாம் கருத்து களத்திலே தெளிவாகவும் இருக்கிறோம். துடிவாகவும் இருக்கிறோம். கண்ணில் விழுந்த தூசியாக இருக்கிறோம் விடுதலை சிறுத்தைகள் என்கிற துரும்பு கண்ணிலே விழுந்து விட்டது கண்ணை கசக்கி கொண்டே இருக்கிறார் அவர்களுக்கு இது ஒரு நெருடலாக இருக்கிறது.

ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சியை ஆர். எஸ். எஸ். இயக்கத்தை ஒரு சராசரி அரசியல் கட்சியாகவும் சராசரி சமூக இயக்கமாகவோ பார்க்க கூடாது என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துகிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் மற்ற கட்சி கள் பாஜக மட்டும் பேசுவாங்க ஆர்எஸ்எஸ் பேசவே மாட்டாங்க ஆர் எஸ் எஸ் ஐ பேசுகிற இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏன் பாஜகவையும் ஆர்எஸ்எஸையும் இணைத்து இணைத்து பேசுகிறோம் என்றால் பாஜக என்பதை தீர்மானிப்பது கூட ஆர் எஸ் எஸ் தான் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பாஜக தீர்மானிப்பதல்ல யாரை தேர்ந்தெடுப்பது என்பதை தீர்மானிப்பது ஆர் எஸ் எஸ் தான் இதை யாரும் மறுக்க முடியாது.
நீதிபதிகள் நியமனம் உட்பட உச்சநீதிமன்றம் ஆக இருந்தாலும், உயர் நீதிமன்றமாக இருந்தாலும் கொலிஜியம் இருந்தாலும் அதனை தலையீடு செய்வது பாஜக என்று நமக்கு தோன்றும் ஆனால் உண்மையில் அது ஆர்எஸ்எஸ் தான் பின்னிருந்து இயக்குகிறது ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பை நாம் ஏன் விமர்சிக்க வேண்டும். ஒரு
12 ஆண்டுகள் டெல்லியில் பாஜக ஆட்சியில் இருப்பதற்கு ஆர்எஸ்எஸ் மட்டுமே காரணம் ஆர் எஸ் எஸ் தான் பாஜக அந்த ஆர்எஸ்எஸ் இயக்கம் மதவாத அமைப்பாக இருக்கிறது என்பதை தாண்டி சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கிறது. அதோடு அவர்கள் நின்று விடுவதில்லை சரி சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பை விதைப்பதால் நீ ஏன் பேசணும் நீ என்ன கிறிஸ்டியனா, நீ என்ன முஸ்லிமா உனக்கு ஏன் அக்கறை நீ ஏன் அதை பேசணும் புரட்சியாளர் அம்பேத்கர் பேசுகிற அரசியலை அவர் வகுத்தலித்த அரசமைப்புச் சட்டம் முன்மொழிகிற அரசியலை சிதைக்கிற முயற்சியில் அது ஈடுபடுகிறது.
அதிலே ஒரு புத்தி தான் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் இதை புரிந்து கொள்வதற்கு அம்பேத்கரை படிக்க வேண்டும் வெளிப்படையாக விமர் சிப்பது பெரியாரை நேரடியாக எதிரி என்று சொல்லுகிறார்கள் பெரியாருக்கு எதிரான வேலைகளை செய்கிறார்கள் அவரை மக்களாக மக்களுக்கு எதிரி என்று உருவானார்கள் ஆனால் அம்பேத்கர் அரசியலுக்கு வேட்டு வைக்கிற போது எப்படி தலையிடாமல் இருக்க முடியும் கருத்து சொல்லாமல் இருக்க முடியும் இதுதான் நம்முடைய போராட்டம். உடனே திமுகவுக்காக தான் திருமாவளவன் இப்படி பேசுகிறார் நாலு சீட்டுக்காக தான் பேசுகிறார்.

திருமாவளவன் தமிழரே இல்ல தெலுங்கு காரர் என்று பேசுகிறார்கள் தேசிய பார்வை ஏன் வேணும் சாதி என்பது தேசிய அளவில் இருக்கிற ஒரு பினாமி மதம் என்பதும் தேசிய அளவில் இருக்கிற ஒன்று அரசமைப்புச் சட்டம் தேசிய அளவில் ஒரு தேசத்திற்கான அரசமைப்புச் சட்டமாக இருக்கிறது எனவே இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டு தனியா பிரிச்சு நீங்க அரசியல் பண்ண முடியாது அதுல வெற்றி பெற முடியாது எனவே ஒருங்கிணைந்த இந்தியா என்கிற அடிப்படையில் தான் பிரச்சினைகளை நாம் கையாள முடியும் அணுக முடியும்.
அதற்கு நமக்கு இருக்கிற ஒரே வாய்ப்பு அரசமைப்புச் சட்டம் என்பதுதான் அந்த அரசமைப்புச் சட்டத்தை கையில் இயங்காமல் நம்மால் அரசியல் செய்ய முடியாது அந்த அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான சக்திகள்தான் சங்பரிவார் சக்தி இணைத்து பேசுகிற போது ஆர்எஸ்எஸ் காரர்கள் அடையாளம் தெரியாமல் இயங்குவார் வெளியே அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டார் நீதிபதிகளை வளைத்து போடுவார்கள் பேராசிரியர்கள் ஆசிரியர் பெருமக்களை வளைத்து போடுவார்கள்.

அரசியல்வாதிகளையும் ஊடக ஊடகவியலாளர்கள் பல ஊடகங்களை கட்டுப்பாட்டுக்குள் கொன்று விடுவார் கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் நாம் தெளிவாக இருக்க வேண்டும் உறுதியாக இருக்க வேண்டும் நம்மை தவிர வேறு எவராலும் இதை மூர்க்கமாக எதிர்க்க முடியாது என்று பேசினார். மேலும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்,













; ?>)
; ?>)
; ?>)