• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அ.தி.மு.க., சேர்மன் தி.மு.க.,வில் ஐக்கியம்

விருத்தாசலம் அ.தி.மு.க., ஒன்றிய சேர்மன் செல்லதுரை, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.கடலுார் மாவட்டம் விருத்தாசலம் ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஒன்றிய சேர்மனாக செல்லதுரை, துணை சேர்மனாக பா.ம.க., பூங்கோதை கொளஞ்சி தேர்வு செய்யப்பட்டனர்.

ஆட்சி மாற்றத்தால், சேர்மன் பதவியை கைப்பற்ற தி.மு.க., முனைப்பு காட்டியது. அதன்படி, அ.தி.மு.க., சேர்மன் செல்லதுரை மீது மற்ற கவுன்சிலர்கள், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, ஆர்.டி.ஓ.,விடம் சமீபத்தில் மனு கொடுத்தனர்.

இந்நிலையில், தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கணேசன் பரிந்துரையின்படி, சேர்மன் செல்லதுரை அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.ஒன்றிய செயலாளர் கனககோவிந்தசாமி, இளைஞரணி அமைப்பாளர் தர்மமணிவேல், துணை அமைப்பாளர் வசந்தகுமார், மாவட்ட கவுன்சிலர் மனோன்மணி கோவிந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.