தமிழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற திமுகவை திருமாவளவன் மிரட்டி வருகிறார். கொல்லங்குடியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்தார்.
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி, மேப்பல் கிராமங்களில் பாஜக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் செய்தியாளரை சந்தித்த போது, தனது தேவைக்காக திமுகவை திருமாவளவன் மிரட்டி வருகிறார். ஆட்சியில் பங்கு என்ற அவரது தேவை என்ன என்பது இப்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.
கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளின் பராமரிப்பை மேம்படுத்த வேண்டும். தமிழகத்தில் விசிக ஒட்டுமொத்த தலித்துகளின் கட்சி கிடையாது. பாஜக, பாமகவை பற்றி பேச திருமாவளவனிற்கு யோக்கியதை கிடையாது. அமெரிக்கா சென்ற முதல்வர் தொழில் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சென்னையில் செயல்படும் கம்பெனிகளின் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உடல் நலம் குறித்து சிகிச்சைக்காக முதல்வர் வெளிநாடு சென்றிருந்தால், அது பற்றி வெளிப்படையாக தெரிவித்து இருக்கலாம். தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோல் திமுக கூட்டணியினருக்கு அமைச்சரவை பங்கு என்பது குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை மொட்டை அடித்து இருப்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு துரிதமாக செயல்பட்டு அவர்களை விடுவித்து வருகிறது. இலங்கை இந்தியா மீனவர்களுக்கான ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெறுவதற்கு சில தாமதங்கள் ஏற்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில் மீனவர்கள் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டு வருகிறது. செல்போன் வைத்திருப்பவர்களெல்லாம் செய்தியாளர்களாகி விட்டனர். வரைமுறை இன்றி செயல்படும் youtube சேனல்களை மத்திய அரசு வரையறை படுத்த கருத்துக்கள் கோரப்பட்டுள்ளது. இப்போது youtube அவர்களுக்கும் சமுதாய கடமை உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும் எனக்கு வேண்டுகோள் விடுத்தார். உத்தரகாண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறு நகரங்களிலும் தனியார் எப்எம் ரேடியோ நடத்த அலைவரிசை வழங்கப்பட்டு வருகிறது. பாஜகவிற்கு முருக பக்தர்களின் ஆதரவை பார்த்து திமுக, முருகன் மாநாடு நடத்தியுள்ளது.இது எல்லாம் திமுகவின் தேர்தல் அரசியல் வெளிப்பாடு என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.