• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தக்கலை பகுதியில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

மத்திய உள்துறை அமைச்சர் தக்கலை பகுதியில் ரோட் ஷோவில் பங்கேற்றார். சாலையின் இரு மருங்கிலும் கூடி நின்ற மக்களை நோக்கி தாமரை சின்னத்தை காட்டியவாறு சென்ற அமித்ஷா, தக்கலை மேட்டுக்கடை பகுதியில் ரோடுஷோவை நிறைவு செய்தவர். கூடியிருந்த மக்களை பார்த்து தாமரை சின்னத்திற்கு வாக்கு தாருங்கள். நான் தமிழர்களையும், தமிழகத்தையும் மிகுதியாக நேசிப்பவன். இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் தமிழை நன்கு கற்று உங்களிடத்தில் தமிழில் பேசுவேன்.

தமிழகத்தில் திமுக, அதிமுக ஊழல் கட்சிகள் இந்த கட்சிகளை அரசியல் இருந்து அகற்றுங்கள். இந்தியா முழுவதும் பாஜக 400_க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றியை தாருங்கள். நாம் காலம், காலமாக பின்பற்றும் சனாதானத்திற்கு எதிரான திமுகவினர், நாம் எழுப்பிய ராமர் கோவிலுக்கும் எதிரானவர்கள். இவர்கள் வெட்க்கி தலைகுனியும் வகையில் அவர்களுக்கு தோல்வியை பரிசாக கொடுங்கள்.

விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் சகோதரி நன்தினி அவர்களுக்கும், பொன்.இராதாகிருஷ்ணனுக்கும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் அனைவருக்கும் வணக்கம் என தெரிவித்தார்.