விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டியில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் மெயின் ரோட்டில் இரண்டு புறங்களிலும் ஏராளமான புளிய மரங்கள் வளர்ந்துள்ளன.

இந்நிலையில் ஒரு புளியமரத்தில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. அப்போது பலத்த காற்று வீசியது. சுற்றுப்புறங்களில் ஏராளமான பட்டாசு கடையில் இருப்பதால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். .அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் அரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.

தீயை உடனடியாக அணைத்ததால் சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்













; ?>)
; ?>)
; ?>)