• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பாதாள சாக்கடை பணி தொடக்க பூமி பூஜை..,

ByKalamegam Viswanathan

Mar 29, 2025

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5 ல் விரிவாக்கப்பட்ட பகுதிகளான திருநகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி 2011ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட பின்பு 100 வார்டுகள் மற்றும் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் பழைய 72 வார்டுகளில் பாதாள சாக்கடை கட்டமைப்பு நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால், புதிதாக இணைக்கப்பட்ட வார்டு பகுதிகளுக்கு பாதாள சாக்கடை கட்டமைப்பு வசதி இல்லாததால், இப்பகுதி பொதுமக்களின் அடிப்படை தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு முதற்கட்டமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 307.78/- கோடி மதிப்பீட்டில், வைகை வடகரை பகுதிகளில் உள்ள புதிதாக இணைக்கப்பட்ட பைப் லைன் மூலம் . 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 13, 15, 17, 18, 19, 20, 33, 34, 37, 38, 39 மற்றும் 40 ஆகிய 22 வார்டுகளில் 360.49 கி.மீ நீளத்திற்கு கழிவு நீர் குழாய் அமைத்தல், 14905 வீடுகளுக்கு இணைப்பு வழங்குதல் மற்றும் புதிதாக 3 கழிவு நீரேற்று நிலையம் அமைப்பதல் போன்ற பணிகள் செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.

இதில் இரண்டாம் கட்டமாக திருப்பரங்குன்றம் திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.பாண்டியன் நகர் பூங்கா அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு
மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை வகித்தார்.

மாநகராட்சி கவுன்சிலர் இந்திராகாந்தி, கல்வி குழு தலைவர் எம்.பி.ஆர். ரவிச்சந்திரன், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ஸ்வேத சத்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாண்டியன் நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.
மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் பணிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் உசிலை சிவா, சுவேதா சத்யன், சிவசக்தி ரமேஷ், விஜயா, வட்டச் செயலாளர்கள் சுந்தர்ராஜன், சாமிவேல், பொது அமைப்பினை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.