• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வருவாய் கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் தலைமையில், உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஐந்து நாள் நடைபெறும் சமபந்தி திருவிழா

ByP.Thangapandi

Jun 12, 2024

உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஐந்து நாள் நடைபெறும் சமபந்தி திருவிழா வருவாய் கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் துவங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவின் பேரில் இன்று முதல் 19ஆம் தேதி வரை சமபந்தி திருவிழா எனும் வருவாய் தீர்ப்பாய முகாம் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வை உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் ரவிச்சந்திரன், வட்டாச்சியர் சுரேஷ் இணைந்து துவக்கி வைத்தனர், முன்னதாக வட்டாச்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகளை உசிலம்பட்டி கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் நட்டு வைத்தார்.

கருமாத்தூர், செல்லம்பட்டி பகுதி முதல் நாளிலும், பாப்பாபட்டி, வாலாந்தூர், திடியன், தும்மக்குண்டு, உத்தப்பநாயக்கணூர், தொட்டப்பநாயக்கணூர், நக்கலப்பட்டி என 53 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட 100க்கும் அதிகமான கிராம மக்களின் அனைத்து மனுக்களையும் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாளும் 10 வருவாய் கிராமங்கள் என ஐந்து நாட்களுக்கு நடைபெறும் இந்த முகாம் பெறும் நிகழ்வில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன், கையெழுத்து இயக்கத்தையும் வருவாய் கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.