விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சாத்தூரில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்எல்ஏக்கள் தங்கபாண்டியன் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துட்டு பேசியது திமுக ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது இன்னும் கட்சி இளமையோடு, எழுச்சி யோடும், புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறது. அதற்கு முழு காரணம் கட்சியின் தொண்டர்கள் தான் காரணம்.

மேலும் கட்சி தொடக்கத்தில் இருந்து நேரு, ராஜாஜி, பக்தவச்சலம், உள்பட பல்வேறு தலைவர்களை எதிர்த்து போராடியது அனைவரும் டானாக இருந்தவர்கள். நாம் எதிர்த்த எல்லாமே டான் தான்.
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் எந்த திட்டத்திலாவது பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
திட்டங்கள் மூலம் பயனடைந்தவர்கள் நிச்சயம் இந்த அரசுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதிகளை ஒதுக்காமல் மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது.
கல்விக்காக வழங்கப்படும் நிதி தரப்படாமல் உள்ளது.
தமிழ்நாட்டிற்கு பல்வேறு பிரச்சனைகளை கொடுத்து பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது ஆனால் அவர்களால் முடியாது. ஒவ்வொரு தொண்டனும் 60 வாக்காளர்களை கையில் வைத்துக்கொண்டு அவர்களிடம் திமுகவின் சாதனைகளை எடுத்து கூறினாலே வரும் தேர்தலில் நமக்கு பெரிய வெற்றி கிடைக்கும். ஓரணியில் தமிழ்நாடு என்று திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 2 கோடி பேர் உறுப்பினராக கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற தயாராக உள்ளது அதனை தடுக்க நாம் ஓய்வின்றி உழைக்க வேண்டும்.
சாத்தூரில் அதிமுக பிளவு பட்டு கிடக்கிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு அணியும், முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் தலைமையில் ஒரு அணியும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். ஆகையால் அதிமுக சாத்தூரில் படு தோல்வி அடையும்.
தென் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என நிர்வாகி கோரிக்கை விடுத்துள்ளனர். எனக்காக அவர் பணம் கட்டினால் தலைவர் மு க ஸ்டாலின் அனுமதித்தால் சாத்தூர் தொகுதியில் போட்டியிட தயாராக இருக்கிறேன்.
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அதில் தகுதியான மனுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.