• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அம்பேத்கர் உருவ சிலையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்..,

குமரி இறச்சகுளம் பகுதியில் அம்பேத்கர் முழு உருவ சிலையை
தணைமுதல்வர உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில்.

இறச்சகுளம் அருள்ஞானபுரத்தில். நிறுவப்பட்ட அரசியல் மாமேதை
டாக்டர் அம்பேத்கர் சிலையை நிறுவி கிட்டத்தட்ட 12_ ஆண்டுகள் தொடர் முயற்சி, கடந்த காலத்தில் கிட்டத்தட்ட 24. போராட்டங்களுக்கு பின் உரிய அனுமதி பெற்ற நிலையில்.

தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் முனைவர்.
தினகரனின் முயற்சியில். நாகர்கோவில் மாநகராட்சி மேயரும்,குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ்யின் பரிந்துரையில்.

தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர்.தினகரன், தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தமிழக வணிக கழகத்தின் தலைவர் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜான், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. ஹெலன் டேவிட்சன்,மற்றும் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் முன்னிலையில்.

தமிழக அரசின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
சட்டமேதை அம்பேத்கர் முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்தார்.

நிகழ்வில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
குமரி மாவட்டம் என்றாலே ஒற்றுமையும், மதநல்லிணக்கமும்தான் என்பதை குமரி முதல் காஷ்மீர் வரையிலான உள்ள இந்தியாவின் பன்முக மக்கள் உணர்ந்துள்ளனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பதின் அடையாளமாக குமரி மாவட்டம் ஒற்றை அடையாளம்.

இந்தியா வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நீள்வதாக ஒரு சொல் உண்டு. உண்மை என்னவென்றால் தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி இந்திய உருவாகியுள்ளது
என்பதே அடிப்படை. தந்தை பெரியார், அம்பேத்கர் இருவரும் மனிதருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருப்பதற்காக போராடினார்கள்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் சொல்வார்
அம்பேத்கர் தாடியில்லாத பெரியார். தாடிவைத்த்த அம்பேத்கர் பெரியார்
என சொல்லியுள்ளார். இந்த அடைமொழிகள் சொல்லின் பொருள் மதமாச்சரியம, ஏற்றத்தாழ்வு இல்லாத இந்த மக்கள் சமூதாயம் என்பதே.

தேர்தல் வருவதால் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழ் நாட்டுக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் தமிழகம் வருவார்கள்.ஆனால்
தமிழகத்திற்கு நியாயமாக தரவேண்டிய ரூ.3.500 கோடி நிதியை தரமாட்டார்கள்.

புதிய கல்வி கொள்கை மூலம் மும்மொழி கொள்கையை தமிழகத்தில் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழ் மக்கள் பாஜனதாவை நம்பமாட்டார்கள் என பேசினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு. தமிழ் நாடு தலித் உரிமைகள் இயக்கம் தலைவர் முனைவர் தினகரனின் மகள் அம்பேத்கர் சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.