கோவை, ஆர் .எஸ் .புரத்தில் உள்ள மாநகராட்சி இருபாலர் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட, சர்வதேச அளவிலான ஹாக்கி மைதானம், மற்றும் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கும் விழா புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் ஆர்.எஸ் புரம் பள்ளி வளாகத்தில் நடந்தது.

விழாவில் சர்வதே தலைவிலான ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான முக ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது பேசியவர்

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஏராளமான நடத்திட்ட உதவிகள் வழங்குவதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் வரப் போகும் ஆண்டு நல்வாழ்த்துக்கள். இன்று ரு.137 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்றைய நிகழ்ச்சியில் வழங்க உள்ளோம். மேலும் 163 கோடி மதிப்பு நிறைவேற்றப்பட்ட திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறோம். 38 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு புதிதாக அடிக்கல் நாட்டப்பட்டது.




