கரூரில் திமுக நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார்.
கரூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் அண்ணா வேலு மகளின் திருமண வரவேற்பு விழா கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளான சிவராம்பிரசாந்த், காவ்யா ஆகியோருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.