மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்:
காங்கிரசுடன் கூட்டணி இறுதிச் செய்யப்பட்டு விட்டதா என்ற கேள்விக்கு:
தலைவர் முடிவெடுப்பார்.

கடந்த முறை போலவே இந்த முறையும் 170 இடங்களில் திமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு:
தலைவர் முடிவெடுப்பார்.
எவ்வளவு கொடுத்தாலும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று உதயகுமார் கூறியது குறித்த கேள்வி:
மக்கள் முடிவு செய்வார்கள். தேர்தலுக்காக கொடுப்பது இல்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வரப்போகிறது அது நிறைய பேருக்கு தெரியவில்லை. தலைவர் அதை உணர்ந்து, மத்திய பிரதேசத்தில் ஒரு முறை இதே போல திட்டத்தை நிறுத்தினார்கள். அதேபோல இங்கு நிப்பாட்ட வேண்டும் என்று பாஜகவும், அதிமுகவும் முயற்சி செய்தார்கள். அந்த நிலைமை வரக்கூடாது என்பதற்காக தலைவர் முன்னேற்பாடாக கொடுத்திருக்கிறார்.
நிதி மடைமாற்றம் செய்யப்பட்டதாக டிடிவி குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:
முதல்வர் முறையாக பதிலளிப்பார் என கூறினார்.






