சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை கோவை கைவிட்டாலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், அடுத்தடுத்து நடக்கவுள்ள தேர்தல்களில் வென்று, கோவையை திமுக கோட்டையாக மாற்றுவதில் திமுக தலைமை உறுதியாக உள்ளது.
அதற்கேற்ப, முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், மு.க.ஸ்டாலின் கோவைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். கோவைக்கு 4 முறை வந்து திட்டப்பணிகளை ஆய்வு செய்துள்ளார்.
கோவையில் வளர்ச்சித் திட்டங்களை கண்காணிக்க அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், சக்கரபாணி ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்தார். பின்னர், அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரும், சென்னைக்கு அடுத்து கோவைக்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்றும் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் தெரிவித்து வருகிறார்.முதல்வர் ஸ்டாலினைப் போல், உதயநிதி ஸ்டாலினும் கோவைக்கு அடிக்கடி வந்து ஆய்வு செய்தும், கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோர் கோவையின் மீது காட்டும் கூடுதல் கவனம் திமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் திமுக மீண்டும் வெற்றித்தடத்தை தொடர்ந்து பதிவு செய்ய, உதயநிதி ஸ்டாலினை கொங்கு மண்டல பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
அதற்கேற்ப, கோவையில் நேற்று நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாம், பகுதி முகவர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், ” கோவையில் எதிர்பார்த்த வெற்றி கிடைத்தால், மாதத்துக்கு 10 நாட்கள் கோவையில் தங்கி பணியாற்றவும் தயாராக உள்ளேன்,’ என்று பேசியுள்ளார்.
துணை முதல்வர் பதவி மீது ஆசையா? – கோவையில் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
அமைச்சர், துணை முதல்வர் பதவிகளை நான் விரும்பவில்லை என கோவையில் நடந்த திமுக நிகழ்ச்சியில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேசினார்.
கோவை ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில், திமுக உறுப்பினர் சேர்ப்பு முகாம், காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தார்.
- ஜக்கம்பட்டி புற்றுக்கோயில் ஆடித் தபசு விழா…தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி ஜக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியில் நாகராஜ சமேத நாகம்மாள் புற்றுக் கோயில் […]
- முதல்வருக்கு வாழ்த்து சொன்ன அண்ணாமலைசெஸ் ஒலிம்பியாட்போட்டிகைளை வெற்றிகரமாக நடத்திய தமிழக முதல்வருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.மாமல்லபுரத்தில் 44-வது […]
- சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவின் மழலை பாட்டு..!!44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் அதற்கான நிறைவு விழா மிகவும் சிறப்பாக […]
- நடிகை கங்கனாவுக்கு திடீரென டெங்கு காய்ச்சல்…பிரபல பாலிவுட் நடிகை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரபல பாலிவுட் […]
- சமையல் குறிப்புகள்முட்டை 65: தேவையான பொருட்கள்:முட்டை – 4 சின்ன வெங்காயம் – 5 மிளகாய் தூள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 12: விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்பாசம் தின்ற தேய் கால் மத்தம்நெய் தெரி இயக்கம் […]
- ஒரே இரவில் கொட்டி தீர்த்த பேய் மழை – வீடியோதென்கொரியாவில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த பேய் மழையால் 9 பேர்பலி.தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் […]
- அழகு குறிப்புகள்சர்க்கரை ஸ்கிரப்:
- கொல்கத்தாவில் முதல் முறையாக நீருக்கடியில் மெட்ரோஇந்தியாவில் முதன்முறையாக கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோரயில்அமைக்க பணிகள் நடைபெறுவதாக தகவல்கொல்கத்தாவில்கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் […]
- வீட்டில் தேசியக்கொடி ஏற்ற மாணவர்களுக்கு அறிவுறத்த வேண்டும்-பள்ளிக்கல்வித்துறைநாட்டின் 75வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் வகையில் […]
- நேற்று ராஜினாமா… இன்று மீண்டும் முதல்வர்பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார் ஆனால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் • நீங்கள் தற்போது பார்க்கும் வெற்றிகரமான மனிதர்களுக்குபின்னால் அவர்கள் எடுத்த துணிவான முடிவு இருக்கும். […]
- பொது அறிவு வினா விடைகள்நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ?ஒடிசா ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் பெரிய நாடு […]
- பா.ஜ.க வை ஆதரித்தால் மக்களின் ஓட்டுரிமை பறிபோகும்பாஜக வை வளரவிட்டால் மக்களின் ஓட்டுரிமை பறிபோகும் என அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை.உத்தரபிரதேசத்தின் கன்னாஜ் மாவட்டத்தில் […]
- திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி?ஒரு முறை கைலாயத்தில் சிவபெருமானின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங்கள் […]