மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, சேடபட்டி அருகேயுள்ளது பி. செட்டியபட்டி . இந்த ஊரைச் சேர்ந்த ஆசை மகன் அஜித் (22), செல்வராஜ் மகன் ராகுல்டிராவிட் (24), ஆகிய இவரும் டூவீலரில் பேரையூர் உசிலம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

மங்கல்ரேவு அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் டீசல் போட்டு சங்கரன் கோவிலுக்கு ஆட்டுச்சாணம் ஏற்றிக் கொண்டு வெளியேறிக் கொண்டிருந்த லாரி அஜித்குமார், ராகுல் டிராவிட் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தானது.

இந்த விபத்தில் அஜித், ராகுல்டிராவிட், ஆகிய இருவரும் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களது உடலை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சேடபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.