திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருள்புரம் செந்தூரான் காலனியில் உள்ள முருகர் கோவிலில் இருந்த ரூ. 20000 மதிப்புள்ள முருகர் சிலை கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து பல்லடம் மகாலட்சுமி நகரில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த இருவரைபிடித்து விசாரிக்கையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். மேலும் அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கையில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த அங்கித் திவாரி 26 , மற்றும் 14 வயது சிறுவர் ஆகியோர் அருள்புரத்தில் உள்ள முருகர் கோவிலில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து முருகர் சிலையை பறிமுதல் செய்தனர்.

மேலும் இருவரையும் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பல்லடம் அருகே முருகர் சிலையை திருடி ஒரு சிறுவர் உட்பட வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைதாகி சிறைக்கு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.