இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பே கிறிஸ்தவ மிஷினரிகள், மக்களுக்கு நலம் பயக்கும் பல்வேறு திட்டங்களை பொது வெளியில் செயல்படுத்தியதின் மூலம் கல்வி, மருத்துவ உதவி என்பது தலையானது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் இருந்த காலையில். தென் இந்திய திருச்சபையினால்(CSI) நாகர்கோவிலில் தோற்றுவிக்கப்பட்ட “ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி”குமரியின் முதல் கல்லூரி என்பது அதன் தனித்த பெருமையுடன் 150_ஆண்டுகளுக்கு மேலாக குமரியில் கல்வியின் கலங்கரை விளக்காக திகழ்கிறது.
மார்த்தாண்டத்தில் உள்ள நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி இந்த இரண்டு கல்லூரிகளும் மதம், இனம்,மொழி கடந்து கல்வி சேவையில் சிறந்த கல்லூரிகளாக திகழ்கிறது.

தமிழகத்தில் எழுத்தறிவு பெற்ற மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம் குறித்து வெளி மாவட்ட மக்களின் ஒற்றை கருத்து. கன்னியாகுமரி ஒரு படித்த மாவட்டம் என்ற பெருமை மிகுந்த சொல்லாடலாக உள்ளது.
கல்லூரிகளுக்கான 2024_ம் ஆண்டு “NIRF” தேசிய தரப்பட்டியலில் குமரி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்லூரிகள் இடம் பிடித்துள்ளது. அந்த இரண்டு கல்லூரிகளுமே தென் இந்திய திருச்சபையின் நிர்வாகத்தின் கல்லூரிகள் அவை முறையே, மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி 42_வது இடத்தையும், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி 100_வது இடத்தையும் பிடித்துள்ளதை கண்டு, குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் பெருமிதம் அடைந்திருக்கும் நிலையில், மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியின் முன்னாள் மாணவர், தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்யிடம் அவர் கல்வி கற்ற மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி NIRF தரவரிசையில் 42-வு இடம் பிடித்திருப்பது பற்றி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இடம் அவர் மனம் திறந்து வெளியிட்டது.

நான் பயின்ற மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி இந்திய அளவில் 42_வது இடம் பிடித்திருப்பது என்னுள் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக நான் கல்லூரி மாணவனாக பயின்று, பட்டம் பெற்று, மாணவர் பேரவையின் தலைவராக அரசியலுக்கு அச்சாரமிட்ட இடம், இந்த கல்லூரி இந்திய அளவில் 42_வது இடம் பிடித்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்றே எங்கள் குமரி மாவட்டத்தில் உள்ள மற்றொரு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி 100_வது இடத்தை பிடித்திருக்கிறது. குமரி மாவட்டம் மக்கள் மத்தியில் ஒரு சமூக மாற்றத்தில் பெரும் பங்காற்றி இந்த இடத்தை பெற்றிருக்கும் இரண்டு கல்லூரிகளுக்கும் அவரது மனப்பூர்வமான நல் வாழ்த்துகள் என தெரிவித்தார்.