கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்து சிறையில் அடைத்து மாவட்ட காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய காவல் துறையினர் மத்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது, கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கிரிதாரி மாஜி (39) மற்றும் பெட்டதாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்@அந்தோணி (36) ஆகியோர்களை கைது செய்து அவர்கள் இடம் இருந்து சுமார் 2 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அந்த ஒரு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.