விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சிப்பி பாறை கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டினர்.

பஸ் நிறுத்தத்தம் அருகில் பணம் வைத்து சிலர் சீட்டாடிக் கொண்டிருந்தது தெரிவந்தது போலீசார் கண்டதும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடினார்கள். அதில் சிப்பிப்பாறை கீழத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 56 ) மற்றும் முத்துசாமி (வயது 50 ) இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 60 சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.