• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிராண்டு தூதராக திரிஷா கிருஷ்ணன் நியமனம்..,

BySeenu

Jul 18, 2025

ரியல் எஸ்டேட் துறையில் குறைந்த காலத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமான கோவையை சேர்ந்த அடிஷியா நிறுவனம்,தனது விளம்பர தூதராக பிரபல திரைப்பட நடிகை த்ரிஷாவை நியமனம் செய்துள்ளனர்.

இந்நிலையில் அடிஷியா தனது புதிய துவக்கமாக தனது லோகோ மற்றும் விளம்பர படங்களை வெளியிட்டது. இதற்கான விழா கோவை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

இதற்கான விழாவில் அடிஷியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன் புதிய .லோகோ மற்றும்,வாடிக்கையாளர் நலன் மீதான அக்கறையுடன் அடிஷியா ஒன் என்ற மொபைல் செயலியையும் அறிமுகம் செய்தார்.

இது குறித்து மணிகண்டன் கூறுகையில், அடிஷியா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியம், வெளிப்படைத்தன்மை மற்றும் எளிதான அணுகுவசதியை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் புதிய செயல்திட்டங்களை அடிஷியா துவங்க இருப்பதாகவும்,கோவையி்ல்,. நீலாம்பூர், பிச்சனூர், காளப்பட்டி, சூலூர் மற்றும் கோவைபுதூர் ஆகிய பகுதிகளிலும் வீட்டுமனை திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அடிஷியா நிறுவனத்தின் எக்கோ வேலி, ஒன் வேர்ல்டு மற்றும் அட்ரஸ் 2.0 என்று பெயரிடப்பட்ட மூன்று முதன்மையான மனைத்திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டது.