• Sun. Mar 8th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

நில அளவை பணியாளர்களுக்கான முப்பெரும் விழா

ByKalamegam Viswanathan

Feb 8, 2025

தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர் சங்கத்தின் 101 ஆம் ஆண்டு விழா, மாநில மற்றும் மாவட்ட பொதுக்குழு நில அளவை பணியாளர்களுக்கான நவீன பயிற்சி மாநாடு உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர்கள் சங்கத்தில் மாநில கூட்டம் நாகமலைப் புதுக்கோட்டை கபிலன் மஹாலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நில அளவை அலுவலர்கள் சங்க மாநில பொதுச்சாளர் பிரபு, மாநில பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மதுரை மாவட்டத் தலைவர் சபரிநாதன் மாநிலச் செயலாளர் மாரிச்செல்வம் ஆகியோர் வரவேற்புரை கூறினார்.

மாநாட்டிற்கு மாநில தலைவர் மகேந்திர குமார் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக மதுரை ( நில அளவை, ) மண்டல துணை இயக்குனர். கணேசன் மாநாட்டினை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தனர்கள் தமிழ்நாடு அரசு ஒன்றிய மாநில தலைவர் துரைப்பாண்டி , தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் , மதுரை மாவட்ட தலைவர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர்களின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
-நவீன நில அளவை குறித்து பொது மக்களுக்கு தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ஒரு குறுவட்டத்திற்கு ஒரு குழு அளவர் போன்ற அளவில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் நில அளவைத் துறையில் பணியாற்றக்கூடிய தொழில்நுட்ப கல்வி இல்லாதவர்களுக்கு தனிப் பயிற்சியையும் நவீன உபகரணங்களை வழங்க வேண்டும்.நில அளவைத் துறையில் தொடர்புடைய அனைத்து அலுவலர்களுக்கும் வருவாய்த் துறை அலுவலர்கள் வழங்கக்கூடிய பயிற்சியே நில அளவை துறை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 19 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் மாநிலத் தலைவர் மகேந்திர குமார் கூறுகையில் நில அளவை அலுவலர்களின்101வது ஆண்டு விழாவும். புதிய நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கு நிழல் அவர்களுக்கான பயிற்சி வழங்கப்பட வேண்டும் அவ்வாறு வழங்கப்படும் பயிற்சிகளுடன் நவீன உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும் பொது மக்களிடையே நில அளவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கணினி மூலம் பதியப்படும் பட்டா மாறுதல் நில அளவை குறித்து பொதுவான விழிப்புணர்வு இல்லை அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் முந்தைய பென்ஷன் திட்டம் போன்றவற்றை அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நில அளவை துறை அலுவலகம் சங்கத்தின் முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாட்டின் சென்னை கோவை திருச்சி கன்னியாகுமரி ஈரோடு சேலம் மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.