வங்கத்தை சேர்ந்த மருத்துவர் பி.சி. ராய் நினைவாக உலக மருத்துவ தினம், ஜூலை 1_ம்தேதி ரோட்டரி சங்கத்தின் புத்தாண்டு, ஜூன் 25 வெள்புள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி புனித அந்தோனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் நடைபெற்றது.
குமரி முதல் சென்னை வரையிலான வெண் புள்ளி விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நிகழ்வாக நடைபெற்ற விழாவில், வெள் புள்ளி தொற்று நோய் அல்ல, பரம்பரை நோய் அல்ல, வெண் புள்ளியாளர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கும் மனோநிலைக்கு ஆட்படக்கூடாது என்ற உறுதிமொழியை, வெண் புள்ளி பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழியை முன் மொழிய, மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்கள், மாணவ, மாணவிகள் வழி மொழிந்தனர்.


கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல் நிலப்பள்ளி மாணவ, மாணவியர்கள் 200_பேருக்கு நாகர்கோவில் ரோட்டரி சங்கம் சார்பில் தமிழ்ஆங்கிலம் சொல் அகராதி வழங்கப்பட்ட நிகழ்வில், ரோட்டரி சங்கத்தின் டாக்டர். பிரவின் 9, மற்றும் 10ம் வகுப்பு மாணவிகள் இருவருக்கு கல்வி உதவி வழங்கப்பட்டது.


நிகழ்விற்கு பள்ளி தாளாளர் அருட் பணி.உபால்ட் தலைமை தாங்கினார். நிகழ்வில். ரோட்டரி கவர்னர் சலீம், டாக்டர்.பிரவின்(தோல் மருத்துவர்) டாக்டர்.முத்துகுமார், ரோட்டரியர்கள் சிபுதாஸ், மைக்கேல், லாரன்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
