• Mon. Mar 9th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டிற்கு புறப்பட்ட தி.மு.க தொண்டர்கள்..,

ByPuthar Pandian P

Mar 9, 2026

திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டிற்கு நிலக்கோட்டை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் தலைமையில் பஸ்சுகளில் தி.மு.க புறப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் தலைமையிலும் அம்மையநாயக்கனூர் பேரூர் கழக செயலாளர் ராஜாங்கம் முன்னிலையிலும் திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாட்டிற்காக பஸ்களில் தி.மு.க தொண்டர்கள் ஏறி இங்கிருந்து புறப்பட்டு பயணத்தை மேற்கொண்டனர்.

கொடைரோடு சுங்கச் சாவடியில் திமுகவினர் புறப்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புறப்பட்டு சென்றது. அதேபோல தென் மாவட்டங்களில் இருந்து வரும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கொடைரோடு சுங்கச்சாவடி கடந்து சென்றனர். அவர்கள் வரும்போது வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.