• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.

தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக சிறப்பாக கொண்டாட.கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, களியக்காவிளை என மாவட்டத்தின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் . கிராமம், நகரம்,ஒன்றியம், பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும்.கலைஞர் கருணநிதியின் 100_வது அகவை தினத்தை மிக சிறப்பாக கொண்டாட நேற்று (ஜூன்2)இரவே அனைத்து ஏற்பாடுகளும் அந்தந்தப் பகுதி கட்சியினர் ஏற்பாடுகள் செய்த நிலையில். கோரமண்டல் இரயிலுக்கு ஒரிசாவில் ஏற்பட்ட இரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் 233பேர் மரணம் அடைய,900_க்கு அதிகமான பேர் காயம் அடைந்த செய்தி பரவி நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில்.தி மு க கழகம் சார்பில் இன்று (ஜூன்_3) நடக்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்ய பட்டதை தொடர்ந்து.
நாகர்கோவிலில் கிழக்கு மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில்.குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் எப்.எம்.ராஜரத்தினம், மாவட்ட பொருளாளர் கேட்சன், நாகர்கோவில் மாநகர செயலாளர் வழக்கறிஞர் அனந்த் மற்றும் கழகத்தின் பல்வேறு பிரிவுகளை சார்ந்தவர்களும்.இந்த அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்