• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜெயலலிதா பிறந்த நாளில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மரியாதை..,

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாள் விழா விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக மாவட்டம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. சிவகாசி சிவன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்குமாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமகக்ளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து சிவகாசி சிவன் கோயிலில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், சிவகாசி ஒன்றிய கழக செயலாளர் ஆரோக்கியராஜ், சிவகாசி மாநகர பகுதிகழக செயலாளர் சாமி(எ) ராஜா அபினேஷ்வரன், முன்னாள் நகர கழக செயலாளர் அசன்பதூரூதீன்அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் தேன்ராஜன், விருதுநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ காலனி மாரிமுத்து, மாவட்ட மாணவரணி அஜய்கிருஷ்ணா, மாவட்ட மீணவரணி செயலாளர் ரெங்கபாளையம் காசிராஜன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப செயலாளர் பாண்டியராஜன், இணை செயலாளர் பாலாஜி, தலைவர் எம்.கே.என்.செல்வம், சிவகாசி கிழக்கு ஒன்றிய கழகப் பொருளாளர் விஸ்வநத்தம் மணிகண்டன், ஒன்றிய கழக இணை செயலாளர் இளநீர் செல்வம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், முன்னாள் கவுன்சிலர் காமாட்சி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை
செயலாளர் யோவான்செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிஙபிரபு, சிவகாசி மேற்கு தகவல் தொழில்நுட்ப செயலாளர் வல்லவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். ரிசர்வ்லையன் தேவர்சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ காலனி மாரிமுத்து, மாவட்ட மாணவரணி அஜய்கிருஷ்ணா மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.