காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று விமானம் மூலம் மதுரை வரும் திருநகர் பாலசந்திரன் இவரது மனைவி கஸ்தூரி மதுரை விமான நிலையத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா திருமங்கலம் வருவாய் கோட்டச்சியர் சிவ ஜோதி ஆகியோர் வரவேற்பளித்தனர்.
பின்னர் தமிழ்நாடு ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் விற்பனையாளர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

தமிழ்நாடு ஆட்டோமொபைல் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில் நாங்கள் கடந்த 18ஆம் தேதி மதுரையிலிருந்து எங்கள் ஆட்டோ மொபைல் சங்கத்தின் சார்பாக
30 பேர் கொண்ட குழுவும் மற்றும் தமிழகத்தின் பிற பகுதியில் இருந்து மொத்தம் 70 பேர் கொண்ட குழு சென்னையில் இருந்து காஷ்மீர் புறப்பட்டு சென்றோம்.
காஷ்மீரில்இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்து சம்பவம் நடந்த அன்று பஹல்காமுக்கு அருகே 95 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் போது சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியினால் பாலசந்திரனுக்கு உடனடியாக மாரடைப்பு ஏற்பட்டது அதனை அதனைத் தொடர்ந்து அவர் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி வழங்கப்பட்டு பின்னர் அங்கிருந்து ஆனந்த் நாக் மாவட்டத்தில் உள்ள ராணுவம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு அவருக்கு ஆஞ்சியோ பொருத்தப்பட்டது.
அங்கிருந்த டாக்ஸி டிரைவர்கள் உடனடியாக உதவி செய்ததில் அவர் உயிர் காப்பாற்றப்பட்டது மேலும் தமிழக அரசு மத்திய அரசு உடனடியாக ஹெல்ப்லைன் ஏற்படுத்தி எங்களுக்கு உதவி செய்தனர் எனது உடல் மீட்டு பாதுகாப்பாக தமிழகம வர ஏற்பாடு செய்தனர்.
மேலும் பாதுகாப்பு துறை அமைச்சர் அமித்ஷா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து பார்வையிட்டார் மேலும் புதுக்கோட்டை மாவட்ட துணை ஆட்சியர் சம்பவ இடத்தில் எங்களுக்கு நேரடியாக வந்து உதவி செய்தார்.
தாக்குதல் சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. பாராட்டதக்கது நமது ராணுவ வீரர்கள் எவ்வளவு உழைக்கிறார்கள் என்பதை நேரடியாக பார்த்ததில் பெருமை அளிக்கிறது என பாலசுப்ரமணியன் கூறினார்.