• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருமழிசை டாஸ்மாக் கிடங்கில் 100க்கும் மேற்பட்ட வக்கீல்களுடன் குவிந்த டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள்

Byஜெ.துரை

May 27, 2023

திருமழிசை டாஸ்மாக் கிடங்கில் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்களுடன் குவிந்துள்ளனர் .நிலுவை தொகையை வழங்காவிட்டால் மதுபானங்களை வெளியே செல்ல அனுமதிக்க மாட்டோம் என கூறி வருவதால் பரபரப்பு
திருமழிசை டாஸ்மாக் கிடங்கில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு வாகனங்கள் மூலம் மதுபானங்களை ஏற்றி செல்வது வழக்கம் இந்த நிலையில் இன்று வழக்கம்போல் மதுபானங்களை ஏற்றி செல்ல தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் வாகனங்கள் உள்ளே வந்தபோது புதிய டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே இருந்த டிரான்ஸ்போர்ட் வாகனங்களுக்கு மதுபானங்கள் ஏற்றி செல்ல அனுமதி வழங்கப்படாமல் இருந்ததால் வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாததால் டாஸ்மாக் கிடங்கிற்கு வந்த வாகனங்கள் சாலையிலேயே நின்று கொண்டிருந்தது.


இதனால் அதிர்ச்சி அடைந்த ட்ரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் உடன் டாஸ்மாக் கிடங்கு முன்பு ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே டிரான்ஸ்போர்ட் நிறுவனம் இங்கிருந்து மதுபானங்களை ஏற்றி செல்ல இயங்கி வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வேறு ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தற்போது தங்களை உள்ளே விட அனுமதிக்கவில்லை என்றும் கடந்த பிப்ரவரி மாதம் தங்களது ஒப்பந்தம் முடிவடைந்ததாக அதிகாரிகள் கூறிய நிலையில் புதிய டிரான்ஸ்போர்ட் வாகனங்கள் வரும் வரை மதுபானங்களை எடுத்து செல்ல வாகனங்களை இயக்கி தருமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதின் பேரில் தாங்கள் வாகனங்களை இயக்கியதாகவும் அதுமட்டுமின்றி தற்போது தங்களுக்கு நிலுவை தொகையாக ரூ.5 கோடி வரை இருப்பதால் அதனை உடனடியாக தரவேண்டும் இல்லை என்றால் தற்போது புதிய டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வாகனங்களில் மதுபானங்களை ஏற்றி செல்ல அனுமதிக்க மாட்டோம் எனவும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது இது குறித்து பழைய டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் டாஸ்மாக் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் பேச்சுவார்த்தை முடிவில் இறுதி முடிவு கட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் அந்த பகுதி பரபரப்பான சூழ்நிலையில் காணப்படுகிறது.