இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. இங்கு தினமும் 10,000_க்கும் அதிகமான பன்மொழி,பல நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

குமரி வரும் சுற்றுலா பயணிகளின் பல கனவுகளை அடைகாத்த அந்த நாட்கள் நனவாகி குமரிக்கு வரும் போது சில நாட்களில் சுற்றுலா பயணிகள் முழுவதுமாக ஏமாற்றம் அடையும் நாட்களாக சில நாட்கள் அமைந்து விடுகிறது.
இயற்கை என்பது சட்டென்று மாரும் தன்மை உடையது. குமரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால். சூரிய உதயம், அஸ்தமனம்,கடல் சீற்றத்தால் படகு பயணம் தடைசெய்யும் போது.

கடற்பாறை திருவள்ளுவர் சிலை,கண்ணாடிப் பாலம், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம்,முக்கடல் சங்கமத்தில் புனித நீராட தடை. இதுபோல் கன்னியாகுமரியை அடுத்துள்ள சுற்றுலா பகுதி திர்பரப்பு அருவியில் அதிக தண்ணீர் பெருக்கெடுத்து வரும் போது சுற்றுலா பயணிகள் குளிக்க தடை என பல சங்கடங்களை சந்தித்து வந்த நிலையில். இன்று (ஜீன்_20)ம் தேதி சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நல்ல நாள் போன்று.
கன்னியாகுமரி சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று எவ்விதமான தடையும் இல்லாமல் குமரியில் உல்லாசமாக நடைபோடலாம்.
