தமிழகத்தில் ஊட்டி, ஏற்காடு பகுதிகளில் மலர் கண்காட்சி தொடங்கி நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் சச்சினானந்தம், மாவட்டவாட்சியர் சரவணன் மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம் ரிபன் வெட்டி தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக வாழை காய்களை கொண்டு அமைக்கபட்ட நுழைவு வாயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மயில், பழங்கள், பூட்டு சாவிகள் ,பழங்களால் உருவாக்கப்பட்ட விளங்குகளில் உருவம் மற்றும் கொடைக்கானலில் இயற்கை அழகினை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

மேலும் கோடை விழாவை கொண்டாட கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு உருவங்களை ரசித்துப் படியும் மற்றும் கொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் பல்வேறு வகையான வண்ண மலர்களை கண்டு ரசித்தபடி தங்களுடைய குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கண்டு ரசித்தபடி புகைப்படங்களை எடுத்து கோடை விடுமுறையை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் கோடை விழாவை கொண்டாடுவதற்காக கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகளின் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை நம்பி உள்ள அனைத்து தரப்பினர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்கள்.