கன்னியாகுமரி கடலில் உள்ள கண்ணாடிப் பாலம் பணிகள் நிறைவடைந்து இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ஆட்சியர் அழகு மீனா அறிவித்தார்.
கன்னியாகுமரி வரும் அனைத்து சுற்றுலா பயணிகளின் கனவுகளில் ஒன்று.
கடலில் படகு பயணம் செய்ய வேண்டும் என்பதே. அதுவும் தொடர்ந்து விடுமுறை என்பதால் பன்மொழி சுற்றுலா பயணிகள் குமரியில் பெரும் கூட்டமாக குவிகின்றனர்.
அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த கண்ணாடிப் பாலம். கன்னியாகுமரியில் ஒரு புதிய அடையாளமாக மாறியுள்ளது. கண்ணிடிப் பாலம் திறந்த பின் குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தான் கண்ணாடி இழைபாலத்தில் கடந்த 15_ம் தேதி முதல் சிறு பராமரிப்பு பணிகள் தொடங்கியதால் 20_தேதி வரை கண்ணாடிப் பாலத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதி தடை செய்யப்பட்டதால், இந்த இடைக்காலத்தில் வந்த சுற்றுலா பயணிகள் கண்ணாடிப் பாலத்திற்கு செல்ல முடியாமல் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.

கண்ணாடிப் பாலம் பணிகள் 20_ம் தேதி வரை தொடரும் என்று இருந்த நிலையில், பராமரிப்பு பணிகள் குறித்த நாளிக்கு, ஒரு நாள் முன்பே நிறைவு பெற்றதால் இன்று முதல் (ஏப்ரல்_19)முதல், கண்ணாடி இழை பாலத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டதில் சர்வதேச சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.