ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் – வி.ரவிச்சந்திரன் தயாரித்து வெண்பா கதிரேசன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “நாளை நமதே”
இத்திரைப்படத்தில் மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குட் கிராமத்தின் பஞ்சாயத்து தொகுதியானது பட்டியலின சமுதாயத்திற்கான தாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலில் தலைவர் பதவிக்கு பட்டியலின சாதியினர் ஒருவர் போட்டியிடுகிறார். அதை பொறுத்துக் கொள்ள முடியாத வேறு சாதியினர், தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர் மற்றும் அவருக்கு உதவிய அனைவரையும் கொலை செய்கின்றனர். இது அந்த ஊரில் கலவர பூமி ஆனது.
இதனால் மீண்டும் அந்த தொகுதி பொது தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. அந்தத் தேர்தலில் அதில் வேறு சாதியை சார்ந்த ஒருவரே வெற்றி பெற்று 15 ஆண்டுகளாக தலைவராக இருந்து வருகிறார்.

அந்த 15 ஆண்டுகளில் அந்த தொகுதியில் எந்த வளர்ச்சியும் இல்லை என்று மீண்டும் அந்தத் தொகுதி பட்டியலின சமுதாயத்திற்கானதாக அறிவிக்கப்பட்டது.
15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த உயிரிழப்பு சம்பவத்தால், தேர்தலில் போட்டியிட பட்டியலினத்தவர் யாரும் போட்டியிட முன் வராத நிலையில் வேறு சாதியினர் ஒருவர் பட்டியல் இனத்தவர் ஒருவரை தேர்வு செய்து போட்டியிட கூறுகிறார்.
தலைவர் நான் தான் பெயருக்கு நீ இருக்க வேண்டும் என்கிறார்.
இந்நிலையில் திடீரென பட்டியலின சாதியை சேர்ந்த நாயகி மதுமிதா தேர்தலில் போட்டியிட முடிவு செய்கிறார்.
இதில் கோபம் அடைந்த வேறு சாதியினர் மதுமிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும்,அவரது குடும்பத்தையும் மிரட்டியும் பல தொல்லைகள் கொடுக்கின்றனர்.

மதுமிதா, இத்தகைய சவால்களையும், தாண்டி தேர்தலில் பின் வாங்காமல் போட்டியிட்டாரா?போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றாரா?தேர்தல் நடந்ததா ?என்பது தான் படத்தின் மீதி கதை.
நாயகி மதுமிதா அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்ற முகபாவனையும் அவரது உடல் மொழி நடிப்பு மட்டுமில்லாமல் அவரது கண்கள் கூட பேசும் நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்.
வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா ஆகியோர்கள் தங்களுக்கு கொடுத்த கதா பாத்திரத்திற் கேற்றவாறு சிறப்பாக நடித்துள்ளனர்.
மிகவும் இயல்பாகவும் ஒரு சம்பவத்தை நாம் நேரில் பார்க்கும் அனுபவத்தை படம் பிடித்து காட்டியுள்ளது ஒளிப்பதிவாளர் பிரவீன் கேமரா கண்கள்.
இசையமைப்பாளர் வி.ஜி.ஹரிகிருஷ்ணனின் இசையில் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
பட்டியலின சமுதாயத்தினருக்கு கிடைக்கும் அரசியல் அதிகாரத்தை தட்டிப் பறிக்கும் அதிகார வர்க்கத்தினர், அதிகார வர்க்கத்தினருக்கு துணை நிற்கும் அரசு அதிகாரிகள் என்றும் அழுத்தமாக பேசியுள்ளார். இயக்குனர் வெண்பா கதிரேசன்.
மொத்தத்தில் அழுத்தமான அரசியல் பேசும் திரைப்படம் “நாளை நமதே”