திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் முதியவர் பிணம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் வடக்கு பகுதியில் அதிகாலையில் அடையாளம் தெரியாது முதியவர் பிணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் வடக்கு பகுதியில் சாகர் மெடிக்கல் அருகே 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.

அவரது சட்டைப் பையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்ற சீட்டு உள்ளது. அதில் கழுவா தேவர் என்று பெயர் உள்ளது. திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.