• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வெற்றிப் படகில் பயணிக்கும் மீம்ஸ் மன்னனின் பிறந்தநாள் இன்று…

Byகாயத்ரி

Sep 12, 2022

சிறுவர் முதல் பெரியவர் வரை காமெடிக்கு பெயர்போன சிரிப்பின் மறுஉருவம் , மீமஸ் க்ரியேட்டர்களின் கண்டென்ட் கதாநாயகன், நண்பர்களுடன் கலாய்த்து பேச இவரின் காமெடி காவியம், பல கோடி மக்களை தன் ரியாக்ஷனிலே கவர்ந்திழுத்த காமெடி மன்னன் வடிவேலுவின் பிறந்தநாள் இன்று..!!

அனைவரது உள்ளத்திலும் தனக்கென தனி இடம்பிடித்து, மன உலைச்சலில் இருக்கும் பலரை சிரிக்க வைத்த சிந்தாமணி இவர் தான்… சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் ஏராளமான மேடை நாடகங்களில் நடித்தார் வடிவேலு. ஏறிய மேடைகளில் எல்லாம் தன்னை ஒரு நகைச்சுவை நடிகராகவே காட்டிக்கொண்டார். வடிவேலுவின் சினிமா பசிக்கு முதலில் தீனி போட்டவர் டி.ராஜேந்தர். 1985-ம் ஆண்டு வெளியான என் தங்கை கல்யாணி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார் வடிவேலு. அப்படத்தில் ஒன்றரை நிமிடம் மட்டுமே தோன்றினார்.ஆனால் இப்போது திரும்பிய பக்கமெல்லாம் விடிவேலுவின் மீம்ஸ் அவரை எட்டா தூரத்தில் உயர்த்தி வைத்துள்ளது சொன்னால் மிகை ஆகாது..எந்த கதாபாத்திரம் எடுத்து நடித்தாலும் தன் இயல்பான நடிப்பினை வெளிபடுத்தி ரசிகர்களை ஈர்த்து இன்று பல கோடி நெஞ்சங்களின் சிரிப்பு நாயகனாக வலம் வருகிறார் வைகை புயல்… எங்களின் சார்பாகவும், ரசிகர்களின் சார்பாகவும் இந்த மீம்ஸ் மன்னனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!!