சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் பேருந்து நிலையம் ஜி.எஸ்.டி.சாலையில் சஞ்சய் எம்.பி.டி.டிராவல்ஸ் என்ற கடை கூல் பார் இயங்கி வருகிறது.

இங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தன. அதன்பேரில் பீர்க்கன்காரணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதனையடுத்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட 60 புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்ததோடு, தடை செய்யப்பட்ட டிராவல்ஸ் கடை மற்றும் கூல் பாரை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடையை மூடி சீல் வைத்தனர்.

மேலும் தொடர்ச்சியாக இந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதால் ரூ.1 லட்சம் அபாரதம் விதிக்கப் படுவதுடன், 3 மாதம் கடைக்கும் சீல் வைக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.