• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர.., ரஷ்யாவிடம் நேரில் வலியுறுத்திய தென்னாப்பிரிக்க அதிபர்..!

Byவிஷா

Jun 19, 2023

தென் ஆப்ரிக்க அதிபர் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடைய உள்ள போரை முடிவுக்குக் கொண்டு வர புதினிடம் நேரில் வலியுறுத்தி உள்ளார்.

தென் ஆப்பிரிக்க அரசு உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரும் பணியின் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்க அமைதி இயக்கம் என்ற பெயரிலான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நேற்று ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா நேற்று சென்று உள்ளார். அதிபருடன், ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்கள் 7 பேர் அடங்கிய குழுவினர் உடன் சென்றுள்ளனர். அவர் இந்த பயணத்தில் ரஷிய அதிபர் புதின் கான்ஸ்டன்டிநோவ்ஸ்கை அரண்மனையில் நேரில் சந்தித்துப் பேசினார்.
அவரிடம் ராமபோசா கூறும்போது..,
”நாங்கள் ஒரு தெளிவான செய்தியுடன் வந்திருக்கிறோம். அது, இந்த போரானது முடிவுக்கு வரவேண்டும்.  ஆப்பிரிக்கக் கண்டத்தில் இந்த போரால் எதிர்மறை தாக்கம் ஏற்பட்டு உள்ளது. உண்மையில், உலகம் முழுவதும் பல நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.