• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியல் எண்ணிக்கை

ByKalamegam Viswanathan

Oct 29, 2024

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் எண்ணிக்கை 48,68,414 ரூபாய் ரொக்கமும், 171 கிராம் தங்கமும், 2கிலோ 510 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று புரட்டாசி மாத உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட ரூபாய் 48 லட்சத்து 68 ஆயிரத்து 414 ரூபாய் ரொக்கமாகவும், 171 கிராம் தங்கமும், 2 கிலோ 510 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான உண்டியல் இன்று திறந்து எண்ணப்பட்டது.

அதில் பணம் ரூ.48 லட்சத்து, 68 ஆயிரத்து 414 ரூபாய், தங்கம் 171 கிராம், வெள்ளி 2 கிலோ 510 கிராம் இருந்தது.

இதில் திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன், அறங்காவலர் குழு தலைவர் சத்தியபிரியா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மணிச்செல்வன், சண்முகசுந்தரம், பொம்ம தேவன், இராமையா முன்னிலையில் திருப்பரங்குன்றம் பக்தர்கள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.