• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

டெல்லி செல்லும் பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு

ByKalamegam Viswanathan

Apr 5, 2025

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியை முடித்து மதுரை வந்து டெல்லி செல்லும் பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாரகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் விமான நிலைய வெளி வளாகம், சோதனை சாவடி, மண்டேலாநகர், பெருங்குடி, வலையன்குளம் மற்றும் சுற்றுச்சாலை சுற்றுப்பகுதிகளில் 2000 போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் மூன்று அடுக்குகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் போலீசார் எட்டடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி வருகை ஒட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக டிரோன்கள் பறக்க மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மதுரை வருகை ஒட்டி மதுரை மாநகர் பகுதிகளில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு நாள் நிகழ்ச்சியாக பிரதமர் மோடி தாய்லாந்து, இந்தோனேசியா, இலங்கை பயணங்களை முடித்து நாளை மறுநாள் ராமேஸ்வரம் வந்து பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்.

அதனை முன்னிட்டு தமிழக முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை நண்பகல் 3.40 மணிக்கு மதுரைக்கு, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி விமானப்படை விமான தளத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் வருகிறார்.

மதுரை விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் சந்திக்கின்றனர். இதற்காக 15 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மதுரை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய ஓடுதளம் விமான நிலைய உள்வளாகம் மற்றும் வெளிவளாகம் இடங்களில் ஐந்து எழுத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் நான்கு துணை ஆணையர்கள் 10 உதவி ஆணையர்கள் 60 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலைய வளாகம் மற்றும் சோதனை சாவடி விமான நிலைய நுழைவாயில் ரிங் ரோடு பெருங்குடி வளையங்குளம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமரின் பாதுகாப்பு பணிக்காக நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி விருதுநகர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் இரவு நேர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான நிலைய நுழைவாயில் இருந்து உள்வளாகம் செல்லும் பயணிகள் வாகனம் மற்றும் இதர வாகனங்கள் போலீஸ்காரின் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் விமான நிலைய உள் வளாகத்திற்குள் செல்ல தடைபாதுகாப்பு காரணங்களுக்காக செய்யப்பட்டுள்ளது.

மதுரை வரும் பிரதமரை வரவேற்க தமிழக அமைச்சர்கள் மற்றும் பாஜக பிரமுகர்கள் அதிமுகவின் முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுடன் சந்திக்க 15 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து விமானப்படை சிறப்பு விமானம் மூலம் மாலை 4:00 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.